Author: cmsadmin

  • சிம்மம்

    இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

  • கடகம்

    இன்று உங்கள் கவலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் நாள். யார் யாரைப் பற்றி சொன்னாலும் ஆதாரமில்லாமல் எந்த விஷயத்தையும் நம்பக்கூடாது. வீட்டிலுள்ளவர்களிடம் யோசனை கேட்டு எதையும் செய்வது உத்தமம்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

  • மிதுனம்

    இன்று கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களில் கவனத்தை செலுத்தவும். தொழிலை விமர்சிப்பவர்களை அமைதியாக அலட்சியப்படுத்துங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

    அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

  • ரிஷபம்

    இன்று சந்தோஷம் துக்கம் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கப் போகிறீர்கள். தெய்வீக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். ஆனால் அதில் முழு நம்பிக்கையுடன் பங்கு பெறுங்கள். வாய்ப்புண் எதுவும் வருவதற்கு காக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

  • ஐயப்ப பக்தர்களே….

    சபரி மலை யாத்திரைக்கு அதாவது சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கோள்ளும் ஒவ்வொரு பக்தரும் சில விரத முறைகளை பின்பற்ற வேண்டும்.
    ஐயப்பனை வணங்கச் செல்லும் பக்தர்கள் தூய்மையை கடைப்பிடித்தல் முக்கியம்.
    வாக்கு, சரீரம் இவற்றை சுத்தமாய் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஐயப்பன் வடிவை உள்ளத்தில் பதித்து, விரதமிருக்க வேண்டும்.
    ஐயனை தரிசிக்க செல்பவர்கள் முறையாக விரதமிருந்து மாலை அணிய வேண்டும். மாலையணிந்த நாள் முதல் நெறிமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பது முக்கியம்.
    சபரி மலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் கடினமான விரதம் மேற்கொள்ள வேண்டும் ஐயப்பனுக்காக மேற்கொள்ளப் படும் விரதத்தின் நாட்கள் 41 நாட்களாகவோ அல்லது 45 நாட்களாகவோ கணக்கில் கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்
    41 நாட்களைக் கூட்டினால் 5 வருகிறது 5 என்பது பஞ்ச பூதங்களை குறிப்பதால் 41 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்
    45 நாட்களைக் கூட்டினால் 9 வருகிறது 9 என்பது நவ கிரகங்களைக் குறிப்பதால் 45 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 45 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.

  • சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை திறப்பு

    மண்டல பூஜை காலத்துக்காக, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 15)நடை திறக்கப்படுகிறது.
    சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை 1-ஆம் தேதி முதல் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும்.
    இந்த ஆண்டு, வரும் 16-ஆம் தேதி மண்டல காலம் தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து, ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றுவார்.
    இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கு மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி மனுகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18-ஆம் படி ஏறி கோயில் முன்புறத்துக்கு வருவர். மாலை, 6.30-க்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து, கோயிலுக்கு அழைத்து செல்வார். இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
    நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஐயப்பன் சன்னதி நடைதிறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
    தொடர்ச்சியாக, 41 நாள்களும் அதிகாலை, 3 மணிக்கு நடை திறந்து, பூஜைகள் நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை அடைப்பு நடைபெறும். டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

  • சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

    தானத்தில் சிறந்தது அன்னதானம்….
    ஒருவனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் வராது. ஆனால், சோறு எனப்படும் அன்னம் மட்டுமே போதும் என்று சொல்ல வைக்கும்…. நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

    சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?
    எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக வேதத்திலே கூறப்பட்டுள்ளது.
    அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
    ஐப்பசி மாத முழுநிலவு நாளில் அஸ்வினி நட்சத்திரம் கூடி வரும் வேளையில் உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு.
    ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒவ்வொரு அபிஷேகம் சிறப்பாகும். ஐப்பசி மாத பவுர்ணமியில் உலகம் முழுவதையும் காத்து படி அளக்கும் சொக்கநாத பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகச்சிறப்பாகும்.
    பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
    அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
    இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
    அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
    அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
    ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

    அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகிறது?
    ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.
    இவ்வளவு மகிமை வாய்ந்த அன்னாபிஷேகம் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனின் அன்னாபிஷேக கோலத்தை தரிசித்து மகிழுங்கள்! இறையருள் பெறுங்கள்!

  • திருப்பதியில் கார்த்திகை வனபோஜன உற்சவம்

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 20 ஆம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளது.
    மதியம் 1 மணியில் இருந்து 3 மணிவரை பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது.
    அதையொட்டி உற்சவர் மலையப்பசாமியை சிறிய கஜ வாகனத்தில் வைத்தும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கு வாகனத்தில் வைத்தும் கோவிலில் இருந்து ஊர்வலம் நடைபெறுகிறது.
    தொடர்ந்து பார்வேடு மண்டபத்தில் வைத்து உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.