முன் கூட்டியே தங்கும் அறைகளை காலி செய்தால் அவர்கள் செலுத்திய பணத்தை 50 சதவீதம் வரை திருப்பித் தர திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் சிலர் மட்டுமே தங்கும் அறைகளை முன்பதிவு செய்கின்றனர். பலர் நேரடியாக திருமலைக்கு வந்த பின்னர் அறை எடுத்து தங்குகின்றனர். திருமலையில் மட்டும் 7,000 தங்கும் அறைகள் உள்ளன. இதில் ரூ.50 முதல் ரூ.7,500 வரை ஒரு நாளைக்கு வாடகை வசூல் செய்யப்படுகிறது. இதில் சாமானிய பக்தர்கள் தங்கும் அறை கள் வெறும் 4,500 மட்டுமே உள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.1,500 வரை உள்ளன. இவை பெரும்பாலும் அதிக கூட்டமுள்ள நாட்களில் கிடைப்பது அரிதாக உள்ளது.
முன்னாள் தேவஸ்தான தலைமை அதிகாரி சாம்பசிவ ராவ் இருந்தபோது திருமலையில் சாமானிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இடமும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. இதனிடையே புதிய தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால் பதவியேற்றார். இவர் தற்போது தங்கும் அறைகள் குறித்து சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அதாவது, தங்கும் அறைகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்துக்கு கோயிலுக்கு வர இயலாமல் போகும் பக்தர்கள், அல்லது தங்க ளது வருகையை தள்ளிப்போடும் பக்தர்களுக்கு அவர்கள் முன்பதிவு செய்த பணத்தை அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கு முன் அந்தப் பணம் திருப்பி அனுப்பப்பட்ட தில்லை. மேலும், தங்கும் அறைகள் எடுத்து தங்குவோர் 12 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 50 சதவீதமும், 6 மணி நேரத்திற்கு முன் காலி செய்தால் 25 சதவீதமும் பணம் திருப்பி தரப்படுமென அறிவித்துள்ளார். இத்திட்டத் துக்கு பக்தர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
Author: cmsadmin
-
பக்தர்களுக்கு புதிய சலுகை…. திருப்பதி தேவஸ்தானம் முடிவு
-
ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை
ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனமும், 6 மணிக்கு கால பூஜையும், 8 மணிக்கு ஸ்ரீராமர் வீதி உலாவும் நடைபெற்றது.பிற்பகல் 12 மணிக்கு சுவாமி சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது.
கோயில் குருக்கள் கையில் சிவலிங்கத்தை ஏந்தி அருள்கொண்டு ஆடியபடியே முதல் பிரகாரத்தில் வலம் வந்து, சுவாமி சன்னதியில் சிவலிங்கத்தை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
-
கும்பாபிஷேகம் கோடிப் புண்ணியம்
நாம் வணங்கும் தெய்வத் திருவுருவச் சிலைகள் கற்களால் ஆனது என்றாலும் , அவற்றிற்குள் தெய்வ சக்தியை ஊடுருவ செய்வதற்கு கடைப்பிடிக்கப்படும் பல சாஸ்திர சம்பிரதாயங்களுள் ஒன்றுதான் கும்பாபிஷேகம்.
கல்லினால் திருவுருவத்தை அமைத்துத் தானிய வாசம், ஜலவாசம் வைத்து அந்த இறைவனின் மந்திரங்களை எழுதி மந்திர யந்திரத்தை 48 நாள் வழிபாட்டில் வைப்பார்கள். வேத சிவாகம விர்ப்பனர்கள் யாகசாலை அமைத்து இனிய மந்திரங்களை ஓதி , யாக அக்னி வளர்த்து வரும் ஜோதியைக் கும்பத்தில் சேர்ப்பார்கள். ஒருங்கிணையப் பெற்ற அந்த மந்திரங்களை ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை ஏற்றுவதற்கு பெயர் தான் குடமுழுக்கு . வைணவ சம்பிரதாயத்தில் சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படுகிறது .
ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா… என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார். சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்… என்றார். பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது;நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்…என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து,பூஜையை முடித்தார்.
தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன்,தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும்,ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம்,இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன்,ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும்,உட்கார வைத்தான்.
புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்… என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே… என்று கேட்டான்.அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.
மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க,உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்… என்றான் எமதர்மன். தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்… என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.
நம்முடைய முன்னோர்கள் நமக்கு பல விஷயங்களை கதைகளின் வாயிலாகத்தான் நமக்கு சொல்லியிருக்கிறார்கள் . இந்த கதை நமக்கு தரும் பாடமானது ,
ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.
நம்மில் எத்தனையோ பேர் ஊரில் இருக்கும் நமது குலதெய்வ கோவில் கும்பாபிஷேகமோ அல்லது நமக்கு தெரிந்த கோவில் கும்பாபிஷேகமோ , நம்மால் நேரில் செல்ல முடியா விட்டாலும் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி , வைப்போம் . எப்படியாவது அந்த புண்ணியக் காரியத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுவோம் . அத்தகைய புண்ணியமிக்க கும்பாபிஷேகத்தைப் பற்றி நாம் அறிந்தது கையளவு . நாம் அறியாத உண்மைகள் கடலளவு .
அத்தகைய சில தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம் .
கும்பாபிஷேகத்தில் வகைகள் நான்காக அறியப்படுகிறது .
ஆவர்த்தம் எனப்படும் வகையில் ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப் படுகிறது .
அனாவர்த்தம் எனப்படுவது ,இந்துக் கோவில்களில் காணப்படும் மூன்று மற்றும் ஆறுகால பூஜை முறைகள் இல்லாமலும் இயற்கை சீற்றம் காரணமாக ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்த கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
புனராவர்த்தம் முறை கும்பாபிஷேகமாவது , ஒரு கோவிலின் கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால், அதற்கு பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
அந்தரிதம் முறையில் ,கோயிலுள் ஏதேனும் அசம்பாவிதமோ அல்லது அதன் புனிதத்திற்கு பங்கம் விளைந்திடின் அதன் பொருட்டு சந்தி செய்யப்படும் .
இனி அடுத்ததாக கும்பாபிஷேக வைபவத்தின் போது விக்ரகப் பிரதிஷ்டையில் பின்பற்றப்படும் முக்கியமான வழிமுறைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் .
இத்தகைய தெய்வப் பணியை திறம்பட செய்ய தகுதியுள்ள ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து , இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தலை அனுஞை அல்லது அனுமதி வாங்குதல்எனப் படுகிறது .
அடுத்ததாக சங்கல்பம் . அதாவது இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்கு தேவையான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்தல் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்கு உரிய தேவதைகளை பூஜை செய்தலே பாத்திர பூஜை
நம் இந்து மத வழக்கப்படி , எந்த செயலை தொடங்கும் முன்னர் விக்கினங்களை நீக்க விநாயகரை வணங்குதல் மரபு . ஆதலால் – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடும் கணபதி பூஜை.
வருண பூஜை யினால் அவ்விடம்சுத்தம் செய்யப் பட வருண பகவானையும் , சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
பஞ்ச கவ்யம் –தெய்வப் பணி செய்வதற்கு முன் நம்முடைய ஆன்மாவை சுத்தம் செய்தல் அவசியமாகிறது . ஆகவே ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை தான் பஞ்ச கவ்யம் .
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற , செயலுக்கும் , அச் செயலை செய்பவர்க்கும் எந்த வித இடையூறும் வராதபடி காக்கச் செய்யப்படுவது .
பிரவேச பலி – நல்லது நடக்கும் இடத்ஹில் தீய சக்திகள் நுழையா வண்ணம் ,எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல்
மிருத்சங்கிரஹணம் – ஆலயம் நிர்மாணம் செய்ய பூமா தேவியை கஷ்ட படுத்தியதற்கு பிராயச்சித்தமாக , பூமா தேவியை மகிழ்விக்க அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அபிஷேகம் செய்தல்.
மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல் . 12சூர்யர்களான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதலே அங்குரார்ப்பணம் எனப்படுவது .
இவ்வளவு கிரியைகளையும் செய்யும் ஆசாரியனுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு கட்டுதலே ரக்ஷாபந்தனம் எனப்படுகிறது .
கும்பலங்காரம் யாதெனில் கும்பங்களை அதாவது கலசங்களை இறைவன் உடம்பாகவே பாவித்து அலங்காரம் செய்தல்.

விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தலே சக்தி அழைத்தல் அல்லது கலா கர்ஷ்ணம் எனப்படுகிறது .
யாகசாலா பிரவேசம் என்பது கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

சூர்ய,சோம பூஜையின் போது , யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுகிறோம் .
மண்டப பூஜை யின் மூலமாக , அமைக்க பட்டிருக்கும் யாகசாலைக்கு பூஜை செய்யப்படுகிறது .
பிம்ப சுத்தியால் விக்ரகங்கள் மந்திர பூர்வமாக சுத்தம் செய்யப்படுகிறது .
யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி,வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்தி இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தலே நாடி சந்தானம் எனப்படுகிறது .
விசேஷ சந்தி எனப்படுவது 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது,உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.
இந்த மனித உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தலே பூத சுத்தி
36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்குகொண்டு சேர்த்தலைஸ்பர்ஷாஹுதி என சொல்லப்படுகிறது .
அஷ்ட பந்தனம் என்பது எட்டு பொருள்களால் ஆன மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பார்கள் .
பூர்ணாஹுதி மூலம் யாகம் பூர்த்தி செய்யப்படுகிறது .

கும்பாபிஷேகம் /குடமுழுக்கு எனப்படுவது யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல் மஹாபிஷேகம் .
இறுதியாக , 48நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை முழு சக்தியுடன் இருக்கச் செய்வதுமண்டலாபிஷேகம் ஆகும் .
இனிவரும் நாட்களில் நம் ஊரிலோ , அல்லது குறைந்தபட்சம் நம் தெருவில் இருக்கும் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அந்த புனித வைபவத்தில் கலந்துக் கொண்டு இறையருள் பெறுவோமாக .
-
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
நம்முடைய தினசரி நடவடிக்கை என்றாலும் சரி , நம் வாழ்வில் நடக்கக் கூடிய எந்த ஒரு பெரிய விஷயம் என்றாலும் சரி , இறைவனின் கருணை இருந்தால் தான் அது நல்ல விதமாக நடக்க முடியும் . ஆனால் பலர் எதோ தன்னுடைய முயற்சியினால் தான் எல்லாமே நடக்கிறது என்று கர்வம் கொள்வதுண்டு . சாதாரண மனிதனில் இருந்து இதிகாச நாயகர்கள் வரை இந்த குணம் உண்டு . வில்லுக்கோர் விஜயன் என்று பெயரெடுத்த அர்ஜுனனையும் இந்த கர்வம் விடவில்லை .
பாரதப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து வழிநடத்தினார் . ஒரு நாள் யுத்தம் முடிந்து பாசறைக்கு திரும்பினான் அர்ஜுனன். அவனுக்கு தன் வில் வித்தையால்தான் வெற்றி அடைகிறோம் என்ற கர்வம் உண்டாயிற்று.
அதனால், வழக்கமாக முதலில் தேரிலிருந்து இறங்கும் அவன், அன்று கிருஷ்ணரை முதலில் இறங்கும்படி கூறினான். அர்ஜுனனின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொண்ட பகவான், அவனது அகந்தையை நீக்க முடிவு செய்தார். “வழக்கமாக நீதானே முதலில் இறங்குவாய்? இன்று மட்டும் ஏன் என்னை முதலில் இறங்கச் சொல்கிறாய்?” என்று கேட்டார். இதற்கு அர்ஜுனன், “இன்று வழக்கத்தை மாற்றலாமே!” என எகத்தாளமாக பதிலளித்தான்.
அதற்கு கிருஷ்ணர் “இல்லை! நீதான் முதலில் இறங்க வேண்டும். நான் இறங்கினால் உனக்குத்தான் ஆபத்து” என்றார். “எனக்கு ஆபத்தா? என்ன ஆபத்து? என் கையில்தான் வில் இருக்கிறதே!” என்றான் அர்ஜுனன் கர்வத்துடன்.
“அதெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம். முதலில் நீ கீழே இறங்கு!” என பகவான் கட்டளையிடும் தொனியில் கூறினார். அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்க பயந்தவனாக அர்ஜுனன் கீழே இறங்கினான். பகவான் பின்னர் இறங்கினார். கிருஷ்ணர் இறங்கியதும் அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது.
கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி, “நான் முதலில் இறங்கியிருந்தால் தேருடன் சேர்ந்து நீயும் சாம்பலாகியிருப்பாய்” என்றார். அர்ஜுனன் மிகவும் பயந்து போய், எதனால் இப்படி நேரிட்டது என்று கேட்டான். கிருஷ்ணர் இவ்வாறு பதிலளித்தார்: “அர்ஜுனா! உனக்கு எதிராக போரிட்டவர்கள் மந்திர சக்தி கொண்ட அம்புகளை எய்தனர். அவை செயல்படாமல் நான் தடுத்து வந்தேன். நான் தேரை விட்டு இறங்கியதும் அம்புகளின் மந்திர சக்தி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. அதனால்தான் தேர் தீப்பற்றிக் கொண்டது. உன்னை இதுவரை காப்பாற்றி வந்தது உனது வீரம் அல்ல. எனது சக்திதான். இதை முதலில் புரிந்துகொள்!” என்றார். அர்ஜுனின் கர்வம் காணாமல் போனது.

அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற எண்ணத்துடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று இருந்து விட்டால் அனைத்தையும் அந்த பரம் பொருள் பார்த்துக்கொள்ளும் .
-
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான புண்ணியத் தலம்
அருள்மிகு லலிதாம்பிகை ஆலயம் , திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்
பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பை ஏற்ற சிவன் , உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக “மனோன்மணி’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார் . அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்’ என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே’ என துவங்கும் ‘லலிதா சகஸ்ரநாமம்’ என்று தல வரலாறு கூறுகிறது .
ஆன்மீக அன்பர்களால் தாய் லலிதாம்பிகையை ஸ்மரித்து மெய்யுருக பாடப்படும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் தான் திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது திருமீயச்சூர்.
காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்று இரு மனைவியர் இருந்தனர். நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாத இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை பெருமானை வழிபட்டனர். அவர்கள் இருவருக்கும் ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்து, அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது.கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தது . தன் தவறுக்கும் வருந்திய அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.
சிவனும் மனமிரங்கி அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயம் அவனது பெயரால் “அருணோதயம்’ என்று வழங்கப்படும் என்றும் அருள் செய்தார். சிறந்த சிவபக்தனான அருணன் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து, சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு ‘மேகநாதன்’ என்ற பெயரில் அருளுகிறார் என்று சொல்லப்படுகிறது . சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் “மீயச்சூர்’ என அழைக்கப்படுகிறது.
சனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரும் அவதரித்ததாக சொல்லப்படுவதால் , திருமீயச்சூர் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது ..

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள்.. வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது என்பதால் இவளுக்கு அதிக சக்தி உண்டு என்கிறார்கள் பலனடைந்தவர்கள் .
கோவில் சிறப்பம்சங்கள்
மதுரையில் மீனாட்சி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அடுத்து இங்குள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது.
லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்ற ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர், “லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும் ?” என கேட்டதற்கு , ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,” என்றார்.
அகத்தியரும் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர், “லலிதா நவரத்தின மாலை’ என்னும் ஸ்தோத்திரம் பாடியதாக சொல்லப்படுகிறது .
சூரியனாரின் சாபம் போக்கிய தலம் என்பதால் இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக, 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
மூலவர் மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர்.
இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.
ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது .
பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இதற்கும் ஒரு புராண கதை சொல்லப்படுகிறத்து .
சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான் என்கிறார்கள்
அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலமான திருமீயச்சூர்அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய முக்கியத் தலமாகும் .
-
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில், வைகாசி மாதம் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா வசந்த உற்சவம் என்று வர்ணிக்கப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளி பிளம்பாய் முருகப்பெருமான் தோன்றிய நாள் வைகாசி விசாக திருநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா வில்வ வனம் என்று அழைக்கப்படும், பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக் கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜையும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் விநாயகர் பூஜை, கொடி மரம் மற்றும் கொடி படத்துக்கு பூஜைகள் நடந்தன. அதையடுத்து காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு வேத விற்பனர்கள், ஓதுவார் கள் மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
-
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் வைத்தியநாத சாயி
பாபாவின் சமஸ்தானத்தில் அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் பல விதம் . பொன் பொருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . பாபாவின் அருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . முன் வினை காரணமாக தீராத வியாதிக்கு தீர்வு தேடி அவர் முன் நிற்பவர் ஒரு விதம் . இதில் தங்கள் வியாதிகளிடமும் இருந்தும் , வலிகளிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டி அவர் முன் கண்ணீர் மல்க நிற்பவர்களே அதிகம் . எப்பேர்ப்பட்ட வைத்தியனாலும் கைவிடப்பட்ட நோய்களும் அந்த வைத்தியநாத சாய் முன் தங்கள் கைவரிசையை காட்ட முடியாது என்று அவர் பக்தர்கள் நம்பினார்கள் .
திக்கற்றவர்களுக்கு சாய் தான் தன்வந்திரி தெய்வம் . ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். தங்கள் மருத்துவர்கள் மேல் அவர்கள் வைத்து இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்த நம்பிக்கை தான் அதிகம். பூட்டி என்று பெயர் கொண்ட ஒரு அடியவருக்கு , ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. நீர் சத்து மிகுந்து வெளியேறியதால் , மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார் பூட்டி . எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்ட நிலையில் , கிழிந்த நாராகப் படுத்திருந்த அவரை எவ்விதமேனும் அழைத்து வருமாறு,ஓர் அடியவரை பாபா அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.
பாபாவை கண்ட நொடியில் ,பாபா! என்னைக் காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா?என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்ட ,வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் , அவரது அதட்டலால் பயந்து , அடுத்த கணமே பூட்டியை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின் திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். பாபாவின் ஒரே அதட்டலுக்கு அந்த நோய்க் கிருமிகள் கட்டுப்பட்டதை எண்ணி ஆச்சரியப் பட்டதுடன் பாபாவின் கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது.
கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்ட பாபாவின் இன்னொரு பக்தரான கண்பத் , பாபாவே கதியென சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் தான் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார்.
கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் கேள்விகளுக்கும் , சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் பாபா என்பதால் , எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதுடன் , அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும் தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் . உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று,பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.
பின் சுதாரித்துக்கொண்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய்,நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள். கண்பத்தின் கண்களும் ,இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன.
இதில் நாம் வியப்பதற்கு எதுவும் இல்லை . பாபா நினைத்தால் , அவர் கருணை இருந்தால் முடியாத காரியம் என இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை பாபாவின் பக்தர்கள் நன்கு அறிவார்கள் .
ஸ்ரீ சாயி திருவடிகளே சரணம்
சாய் சரிதம் தொடரும் …
-
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் வைத்தியநாத சாயி
பாபாவின் சமஸ்தானத்தில் அவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் பல விதம் . பொன் பொருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . பாபாவின் அருள் வேண்டி நிற்போர் ஒரு விதம் . முன் வினை காரணமாக தீராத வியாதிக்கு தீர்வு தேடி அவர் முன் நிற்பவர் ஒரு விதம் . இதில் தங்கள் வியாதிகளிடமும் இருந்தும் , வலிகளிடம் இருந்து விடுதலை கிடைக்க வேண்டி அவர் முன் கண்ணீர் மல்க நிற்பவர்களே அதிகம் . எப்பேர்ப்பட்ட வைத்தியனாலும் கைவிடப்பட்ட நோய்களும் அந்த வைத்தியநாத சாய் முன் தங்கள் கைவரிசையை காட்ட முடியாது என்று அவர் பக்தர்கள் நம்பினார்கள் .
திக்கற்றவர்களுக்கு சாய் தான் தன்வந்திரி தெய்வம் . ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். தங்கள் மருத்துவர்கள் மேல் அவர்கள் வைத்து இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்த நம்பிக்கை தான் அதிகம். பூட்டி என்று பெயர் கொண்ட ஒரு அடியவருக்கு , ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. நீர் சத்து மிகுந்து வெளியேறியதால் , மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார் பூட்டி . எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்ட நிலையில் , கிழிந்த நாராகப் படுத்திருந்த அவரை எவ்விதமேனும் அழைத்து வருமாறு,ஓர் அடியவரை பாபா அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.
பாபாவை கண்ட நொடியில் ,பாபா! என்னைக் காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா?என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்ட ,வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் , அவரது அதட்டலால் பயந்து , அடுத்த கணமே பூட்டியை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின் திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். பாபாவின் ஒரே அதட்டலுக்கு அந்த நோய்க் கிருமிகள் கட்டுப்பட்டதை எண்ணி ஆச்சரியப் பட்டதுடன் பாபாவின் கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது.
கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்ட பாபாவின் இன்னொரு பக்தரான கண்பத் , பாபாவே கதியென சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். ஆனால் அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் தான் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார்.
கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. ஆனாலும் கேள்விகளுக்கும் , சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் பாபா என்பதால் , எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதுடன் , அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும் தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் . உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று,பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.
பின் சுதாரித்துக்கொண்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய்,நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள். கண்பத்தின் கண்களும் ,இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன.
இதில் நாம் வியப்பதற்கு எதுவும் இல்லை . பாபா நினைத்தால் , அவர் கருணை இருந்தால் முடியாத காரியம் என இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை பாபாவின் பக்தர்கள் நன்கு அறிவார்கள் .
ஸ்ரீ சாயி திருவடிகளே சரணம்
சாய் சரிதம் தொடரும் …
-
கங்கைகொண்டான் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
நெல்லை அடுத்துள்ள கங்கைகொண்டானில், அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
மிகப் பழமையான இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக மே 31 ஆம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வாக ஜூன் 1 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு கோயில் விமான கோபுரத்துக்கு மஹா கும்பாபிஷேகமும் காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. -
ஷீரடி சாய்பாபாவுக்கு குடமுழுக்கு….
திருத்தணி அருகே உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் நுழைவு வாயில் கோபுரத்தின் மகா குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் கிராமத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தான் குடமுழக்கு விழா நடைபெற்றது. இக்கோயில் முன், புதிதாக நுழைவு வாயில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் குடமுழுக்கு விழா, பாலசுப்பிரமணியர், நவக்கிரகங்கள் ஆகிய மூர்த்திகள் ஸ்தபன நவ கலசாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை காலை, 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை, தன பூஜை பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன. புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் 3-ஆம் கால யாக பூஜை, இரவு பாபா திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.