சபரிமலை சுவாமி ஐயப்பன் திருமணம் ஆகாதவர் என்பதால்' அவரை கன்னிசாமி என பக்தர்கள் அன்போடு, அழைக்கின்றனர் சுவாமி ஐயப்பன் பல்வேறு கோவில்களில், இருந்தாலும் அவை அனைத்திலும் ஐயப்பன் அமர்ந்த நிலையில் தனியாகத்தான் காட்சியளிப்பார், ஆனால் தம்பதி சமேதராக சுவாமியை ஐயப்பன் காட்சியளிக்கும் திருக்கோவிலானது எங்கு உள்ளது தெரியுமா ? வாருங்கள் சரண கோஷத்துடன் அவனை தரிசிக்கலாம்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் தமிழக- கேரள எல்லை பகுதியில் ‘ஆரியங்காவு’ அருள்மிகு ஸ்ரீ சுவாமி ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஐயப்பன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.
சபரிமலை போன்று இல்லாமல், மதம் கொண்ட யானையை விழுத்தி அதன் மீது இருபுறமும் பூரண தேவி, புஷ்கலை தேவியர் சமேதராக காட்சியளிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும், திருமணத்தடை நீங்க இவரை வழிபடலாம், தமிழ் கடவுள் ஆன, முருகப்பெருமானுக்கு, ஆறு படை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை இருப்பது போன்று; சுவாமி ஐயப்பனுக்கு, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடுகள் உள்ளன. புஷ்கலை தேவியை சுவாமி ஐயப்பன் திருமணம் செய்யும் விழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது, ஆரியங்காவு ஐயப்ப சுவாமிக்கு ‘கல்யாண சாஸ்தா’ என்ற திருப்பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்
Leave a Reply