The goddess, who appears as a full-term pregnant woman, “will give birth to a child, devotees have faith”!

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. சக்தியின் வடிவமான அங்காள பரமேஸ்வரி, நிறைமாத கர்ப்பிணி பெண் போன்று பெரிய புற்றின் தோற்றத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது. இங்கு முக்கிய வழிபாடு தெய்வமாக   பூங்காவனத்து அம்மன் என அழைக்கப்படுகிறாள். பிரசவ நிலையில் காணப்படும்.

ஒரு பெண்ணை போன்று வாயைத் திறந்து சைன கோலத்தில் சுயம்பு புற்றின் வடிவத்தில் அம்பிகையின் தோற்றம் அமைந்துள்ளது. பொதுவாக அம்மன் ஆலயத்தில் சிம்மம் காணப்படும், ஆனால் இங்கு கருவறையில் லிங்க வடிவில் சிவபெருமான் அருள் பாவிப்பதால், சிங்கத்திற்கு பதிலாக நந்தி தேவர் காட்சியளிக்கிறார். இங்கு இது அபூர்வமாக கருதப்படுகிறது.

விநாயகர், நடராஜன், மதுரை வீரன் , சுப்பிரமணியர் , தட்சிணாமூர்த்தி, தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆகியோரும் சன்னதி கொண்டுள்ளனர். தல விருச்சகம் வேப்பமரம், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு வடிவான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை பக்தியுடன் வழிபட்டால், பெண்களுக்கு திருமணம், குழந்தை பேரு, ஆண்களுக்கு வேலைவாய்ப்பு, சுயதொழில் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை,

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *