Thirupathy Garuda Sevai

திருப்பதி சமீபத்தில் இருக்கும் சீனிவாச மங்காபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று இரவு கருட வாகன புறப்பாடு  நடைபெற்றது.

 அப்போது திருமாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கல்யாண வெங்கடேஸ்வரருக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

 கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு காலை இரவு ஆகிய வேலைகளில் சாமி ஊர்வலம் நடைபெறும் நிலையில் ஐந்தாம் நாளான இன்று இரவு கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.

 அப்போது திருமாட வீதிகளில் காத்திருந்த கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *