Kumbha rasi September Monthly Prediction – 2023

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ)  – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:

17-09-2023 அன்று சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-09-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

30-09-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

சமயோசித்தம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்யக் கூடிய கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.  

பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

திருவோணம்:

இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம் குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.

பரிகாரம்: கார்த்திகை விரதம் இருந்து முருக கடவுளை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *