Tag: Kumbha Rasi

  • Kumbha rasi September Monthly Prediction – 2023

    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் சனி (வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன்(வ)  – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

    கிரகமாற்றங்கள்:

    17-09-2023 அன்று சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    27-09-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-09-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சமயோசித்தம் போல் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்யக் கூடிய கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

    குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.  

    பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும்.

    கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

    அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

    மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு  வேலை கிடைக்கலாம்.

    திருவோணம்:

    இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.

    பரிகாரம்: கார்த்திகை விரதம் இருந்து முருக கடவுளை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 16, 17

    அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Kumbha Rasi May Monthly Prediction – 2023

    கும்பம்:

    கிரகநிலை:

    ராசியில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் (வ), ராகு,  சூர்யன், குரு  – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    03-05-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    12-05-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-05-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-05-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    அனைத்து விதத்திலும் ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய கும்ப ராசிக்காரர்களே இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம்  உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.

    தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.  பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக  காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.

    குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை  நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.  தாயார் வழி உறவினர்களிடம் உறவு நல்ல நிலையில் நீடிக்கும்.

    பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி  அடைவீர்கள்.

    அரசியல் துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.

    கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

    அவிட்டம் 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம்  தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரத்து இருந்தாலும் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். போட்டிகள் தொல்லை தராமல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள்.  வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

    சதயம்:

    இந்த மாதம்  குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும்.

    பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:

    இந்த மாதம்  மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.

    பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி  வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள் – புதன் – வெள்ளி; தேய்பிறை: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 29-05-2023 காலை 07:38 மணி முதல் 31-05-2023 மாலை 04:58 மணி வரை

    அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Kumbha Rasi March Monthly Prediction – 2023

    கும்பம்:

    கிரகநிலை:

    ராசியில் புதன், சூரியன்  – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் – தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு  – சுக ஸ்தானத்தில் செவ்வாய்  – பாக்கிய ஸ்தானத்தில் கேது  – விரைய ஸ்தானத்தில்  சனி  என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    09-03-2023அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    13-03-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    14-03-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-03-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    29-03-2023அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    பலன்:

    கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் உடைய கும்ப ராசியினரே இந்த மாதம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட  நாள் கஷ்டங்கள் நீங்கும். ராசிநாதன் சனி சஞ்சாரம் பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும்.

    தொழில், வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைப்பதிலும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக அமைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.

    குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது  எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்

    பெண்களுக்கு மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

    அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

    மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திகூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

    அவிட்டம்:
    இந்த மாதம் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

    சதயம்:
    இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

    பூரட்டாதி:
    இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

    பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
    அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 28, 29, 30

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Kumbha Rasi December Monthly Prediction – Sakthi Online

    கும்பம்:

    கிரகநிலை:

    ராசியில் சந்திரன் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு  – தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ்) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் புதன் – விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2022 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    16-12-2022 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

    30-12-2022 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் கும்ப ராசியினரே இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

    தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

    பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.

    மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.

    அவிட்டம் 3, 4 பாதம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    சதயம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

    இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உங்கள் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

    அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10, 11

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Kumbha rasi Aug Monthly Prediction – 2022

    கிரகநிலை:
    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராஹூ –  பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் – களத்திர ஸ்தானத்தில் புதன், சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை உள்ளது.
    கிரகமாற்றங்கள்:

    07-08-2022 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    10-08-2022 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் குணமுடைய  கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மாத மத்தியில் காரிய தடைகள் எதிலும் தாமதமான  போக்கு காணப்படும்.  மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு  சந்தோஷத்தை தருவதாக இருக்கும்.  உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுதரும்.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.  
    பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணபுழக்கம் அதிகரிக்கும்.
    மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். 

    அவிட்டம் 3, 4 பாதம்:
    இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சனைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள்.

    சதயம்:
    இந்த மாதம் தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில்

    ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.    

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
    இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.

    பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

    சந்திராஷ்டம தினங்கள்: ஆக 2, 3, 29, 30, 31
    அதிர்ஷ்ட தினங்கள்: ஆக 20, 21

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Kumbha rasikku 2022 year rasipalan

    கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)

    கிரகநிலை:
    ராசியில் குரு – சுக ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது – லாப ஸ்தானத்தில் சூர்யன் – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக் (வ), சனி என கிரகங்கள் வலம் வருகின்றன.

    கிரக மாற்றங்கள்:
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு ராஹு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    21-03-2022 அன்று மாலை 03:13 மணிக்கு கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
    14-04-2022 அன்று குரு பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்கள்:
    கும்ப ராசி அன்பர்களே  இந்த வருடம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். 

    குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வண்டி – வாகனங்கள் – இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது கவனம் தேவை. மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதரவு நீடிக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணி இட மாற்றம் – பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். 

    பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.

    மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.

    அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும். 

    அவிட்டம் 3, 4 பாதங்கள்:
    இந்த வருடம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள். மனதில் இருந்த கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும்.

    சதயம்:
    இந்த வருடம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.

    பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்:
    இந்த வருடம் பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.  வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 

    பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர எதிர்ப்புகள் அகலும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
    அதிர்ஷ்ட ஹோரைகள்: சனி – புதன் – சுக்ரன்
    எண்கள்: 6, 7, 8

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நமஹ” என்ற ம்ந்திரத்தை தினமும் 17 முறை சொல்லவும்.
    செல்ல வேண்டிய ஸ்தலம்: சிவன் கோவில்களுக்குச் சென்று வரவேண்டும்.
    மலர் பரிகாரம்: முல்லைப் பூவை சிவனுக்கு அர்பணித்து வணங்கி வருவது நல்லது.

  • Kumbha Rasi Rahu Kedhu Peyarchi Palangal

    கும்ப ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது கும்ப ராசிக்கு நான்காம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்கள் வாழ்க்கையில் சில சுவாரஸ்யமான தருணங்களுக்கு வழி வகுக்கக் கூடும். ஆனால் அதே நேரம், சில சங்கடங்களையும் உடன் அழைத்து வரும் என்றும் சொல்லலாம். இப்பொழுது, வாழ்க்கை வசதிகள் மற்றும் லௌகீக இன்பங்கள் சற்று அதிகரிக்கக் கூடும். வளம், செல்வச் செழிப்பு போன்றவற்றுடன் கூடிய நவீன வாழ்க்கை வாழும் வாய்ப்பு, உங்களுக்குக் கிட்டும். 

    பொதுவாக, ஆன்மீக ஈடுபாட்டை விட உலக இன்பங்களை அனுபவிக்கும் நாட்டம் பெருகும். ஆனால் இதன் காரணமாக, உங்கள் மனதில் நிலவும் வழக்கமான அமைதி குலையும். நிலங்கள், வீடுகள் அல்லது சொத்துக்களை வாங்குவது, விற்பது போன்ற ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் குறித்து, நீங்கள் இப்பொழுது, கவனமாக இருப்பது அவசியம். பொதுவாக உங்கள் தாயார் உடல்நிலை பாதிக்கப்படலாம். எனவே, உங்களில் சிலருக்கு தாயாரின் உடல் நிலை பற்றிய கவலை இருக்கும். 

    உங்கள் பாதுகாப்பு என்பதும் இப்போது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே  வாகனம் ஓட்டும் பொழுது எச்சரிக்கை தேவை. ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது, அதிக வேகத்தைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது அவசியம். உங்களில் சிலர், புதிய ஊர்களுக்கு இடம் பெயரும் வாய்ப்பும் உள்ளது. இந்தப் பெயர்ச்சியின் பொழுது, மாணவர்கள், தங்கள் விருப்பப்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான நல்ல வாய்ப்புகளும் உள்ளன.

    கேது உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான கும்பத்திற்குப் பத்தாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, பாதகங்களை விட, உங்களுக்குச் சாதகங்களே அதிகம் ஏற்படும் எனலாம். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவீர்கள். இதனால் அதிக உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். இருப்பினும், அதே சமயம், பொறுப்புகள் பலவற்றை ஏற்றுக் கொள்வதையும் தவிர்த்து விடுவீர்கள்.  

    சம்பளம் பெறும் ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். மதம், ஆன்மீகம் சார்ந்த துறைகளான ஜோதிடம், கைரேகை, வாஸ்து சாஸ்திரம், அல்லது ஃபெங் சூய் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களும் இப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு, தொழில் முன்னேற்றம் காணலாம். எனினும், எந்தவொரு முறையற்ற அல்லது ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடாமல், விலகி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது உங்களுக்கு நன்மை தரும் என்பதை உறுதியாகக் கூறலாம். இந்தக் காலகட்டத்தில், உங்களில் சிலர், உலக வாழ்க்கையில் விரக்தி அடைந்து, ஆன்மீகப் பாதையை நோக்கித் திரும்பும் வாய்ப்பும் உள்ளது. 
     

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

     

    •