Kumbakonnam machapuriswarar temple palalayam

கோவில் தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பாலாலயத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் நடைபெற்றது.

அது சமயம் முதல் நாள் விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை, வேத பாராயணம் பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது இரண்டாவது நாள் கோ பூஜை,  இரண்டாம் கால யாக  பூஜை  அதனை தொடர்ந்து விமான பாலாலயம் சுவாமிக்கு மகா தீபராதனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர்கள் ஹாசினி, சிவசங்கரி, ஆய்வாளர் லட்சுமி, கங்காதர சிவாச்சாரியார், கோவில் மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நாட்டாமைகள் கிராமவாசிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *