pudhumal swamy temple therotam

நாகர்கோவில் அருகே புதூர் ஸ்ரீ புதுமால் சாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சிறுவர் சிறுமிகள் மட்டுமே தேரை வடம் இழுத்தனர் இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேறனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயில் புரட்டாசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவில் தினமும் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் கும்ப பூஜை ஹோமங்கள் நடைபெற்றது.

இந்த திருவிழாவின் போது 5500 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்று முடிந்தது இதனுடைய இன்று மாலை  பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழா நடைபெற்றது கேரளா சிங்காரி மேளம் செண்டை மேளம் முழங்க முத்துக்குடை பவனி உடன் ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த தேர் திருவிழாவில் சிவன், விஷ்ணு ,பிரம்மா ,லட்சுமி போன்ற கடவுள்களின் வேடமடைந்தவர்கள் ஆட்டம் ஆடி  தேர் திருவிழாவில் பவணியாக சென்றனர் இந்த தேரை சிவா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவாகுமார் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார் இதை அடுத்து சிறுவர் சிறுமியர் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர் பெருமாள் சாமி கோவில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் புதூர் ,மேலபுதூர் பனவிளை காளியாவிளை போன்ற பகுதிகளில் வலம் வந்து மீண்டும் கோவில் சன்னிதானத்தில் வந்தடைந்தது இதில் கலந்துகொண்ட பக்தர்கள் புதுமால் சாமியின் ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர் இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *