pradhosha vazipadu

வாலாஜாபேட்டை காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரநாதர்  ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அருள்வாக்கும் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை பிரதோஷம் வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக கருவறையில் இருந்த  காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூ மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது  அதன் பின்னர் கோவில் வளாகத்தின் வெளியே  நந்தி பகவானுக்கும் இளநீர்,பால்,தயிர் பஞ்சாமிர்தம்,சந்தனம் திருமஞ்சனம் ஆகிய திரவிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பூ அலங்காரம் செய்யப்பட்டு  தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து உற்சவ வடிவத்தில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரரை நந்தி வாகனத்தில் பக்தர்கள் அனைவரும் சிவ புராண பாடல்களை பாடியபடி ஆலயத்தில் இருந்த  சிறுவர்கள் சிவகணங்களை வாசித்தபடியும் மேளங்கள் அடித்தபடியும் பக்தர்கள் ஆலய பிரகாரங்களை மூன்று முறை  சுற்றி வந்து உற்சவரை வழிபட்டு சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *