Dhanvanthri peedam muperum yagam

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சுயம்வர கலா பார்வதி, கந்தர்வராஜ, சந்தான கோபால யாகங்கள் நடைபெற உள்ளன.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.03.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சுயம்வர கலா பார்வதி யாகம், கந்தர்வராஜ யாகம் மற்றும் சந்தான கோபால யாகம் என முப்பெரும் யாகங்களாக நடைபெற இருக்கிறது.

இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவக்கிரக பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டியும், பெண்கள் திருமணத்தடை நீங்க வேண்டியும், ஆண்கள் திருமணத்தடை நீங்க வேண்டியும் மஹா சங்கல்பம் நடைபெற்று சகல தோஷ நிவாரணத்திற்காக பிரார்த்தனையும் நடைபெற உள்ளது. 

சுயம்வர கலா பார்வதி யாகம்

சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாக இருக்க இந்த யாகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது பங்கேற்பவர்களின் நம்பிக்கையாகும்.

கந்தர்வராஜ யாகம்

கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாக இருக்க இந்த யாகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது பங்கேற்பவர்களின் நம்பிக்கையாகும்.

சந்தான கோபால யாகம்

சந்தான கோபால யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி  விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும். இந்த யாகம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது பங்கேற்பவர்களின் நம்பிக்கையாகும்.

மேற்கண்ட நன்மைகள் பெற வருகிற 17.3.2022 வியாழக்கிழமை பௌர்ணமி அன்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பன்னர்களை கொண்டு சகலவிதமான தோஷங்களும், சாபங்களும், நவக்கிரகங்களால் ஏற்படும் தடைகளும் நீங்கி, சுபகாரியங்கள் குடும்பத்தில் ஏற்பட சுயம்வரகலா பார்வதி ஹோமம், கந்தர்வராஜ ஹோமம் மற்றும் சந்தான கோபால ஹோமம்  நடைபெற உள்ளது. மேலும் இதில் திருமணம் வேண்டி பங்கேற்கும் ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், குழந்தை வரம் வேண்டி பங்கேற்கும் தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பாக்யம் ஏற்பட நவநீத கிருஷ்ணர் வழிபாடும், வெண்ணை சாத்தும் வைபவமும் முப்பெரும் யாகங்களாக நடைபெறும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள், ஆண்கள் மற்றும் தம்பதிகள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 294022, செல் – 94433 30203

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *