Anjaneyar koil kumbabishegam

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மதுரை அனுப்பானடி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

மிகவும் புகழ்பெற்ற மற்றும் புராதன மிக்க இத்திருக் கோவிலில் திருப்பணிகள் மற்றும் மராமத்து பணிகள் நிறைவு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த வாரம் மகா கணபதி உள்ளிட்ட யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

இதன் முக்கிய வைபவமாக இன்று மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உயர்நீதி மன்ற நீதியரசர் திருமதி.விமலா முன்னிலையில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், பல்வேறு பிரமுகர்கள் பலர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோசம் முழங்க யாகசாலை கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு வைதிக முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட 5000 மேற்பட்டபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *