2020 Sani Peyarchi

அள்ளிக் கொடுப்பவரும் சனிபகாவனே, ஆணவக்காரர்களை தட்டி வைப்படும் சனிபகவானே. எனவே தான் நவகிரகங்களில் சனி என்றாலும் சனிப்பெயர்சி என்றாலும் அனைவருக்கும் பயம் தான்.  2020ஆம் ஆண்டு ஏழரை சனி யாரை அதிகம் பாதிக்கும், யாருக்கு சங்கடம் தரும் ஏழரை சனி முடிந்து யாருக்கு சந்தோஷம் வரப்போகிறது என்று பார்க்கலாம். 

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நிகழ்கிறது. சனி பகவான் தற்போது தனசு ராசியில் சஞ்சரிக்கிறார்.  வாக்கியப்பஞ்சாங்கப்படி 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். 

ஏழரை ஆண்டு காலமாக சனியின் பிடியில் சிக்கியிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. அதே நேரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. என்னதான் ஏழரை சனி காலம் என்றாலும் சனிபகவான் அவருடைய சொந்த வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் எனவே அதிகம் நன்மைகளே நடைபெறும்.

மகரம் ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. மகரம் ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மீனம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிடுகிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் தனுசு, மகரம், கும்பம், ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த படிப்பினையை கற்றுத்தரப்போகிறார் சனி பகவான். 
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *