Atthi Varadhar 28 th Day

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 

28-வது நாளான நேற்று அத்தி வரதர் நீல நிற பட்டாடையில் காட்சி அளித்தார். நேற்று ஞாயிறு விடுமுறைநாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.  பொது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் திக்குமுக்காடி வருகிறது. பொது தரிசனத்தில் அத்தி வரதரை தரிசிக்க 6 மணி நேரம் ஆனது.

 27 நாட்களில், 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர் . 28 வது நநாளான நேற்று மட்டும் 3 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கின்றனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *