Thirupathy Ezhumalayan Vaira Kavasam

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேகத்தில் வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

 தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தினால் சுவாமி  சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த ஜேஷ்டாபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். 

அதன்படி இந்தாண்டு 3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில்  சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. 

இதில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து மாலை உற்சவர்களுக்கு வைர கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2வது நாளான நாளை முத்து  கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

3வது நாள் மீண்டும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே சுவாமிக்கு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர் .  

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *