Thiruninravur Bakthavachala Perumal Thiruvooral

திருநின்றவூரில் உள்ள பக்தவத்சல பெருமாளுக்கு திருவூறல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றுள்ளது..

திருவிழாக்கள் இல்லாத நாளில், சுவாமி ஆற்றங்கரையில் ஓய்வு எடுத்து திரும்பும் நிகழ்வு, திருவூறல் உற்சவம் எனப்படுகிறது.அந்த  வகையில் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் திருவுறல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருநின்றவூரில் இருந்து கூவம் ஆற்றங்கரை வந்த பக்தவத்சல பெருமாளுக்கு பக்தர்கள் முன்னிலையில் பால் ,தயிர்,சந்தனம்,பன்னீர், தேன்,இளநீர் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதன் பின்னர் பல்லாக்கில் பக்தவத்சல பெருமாள் ஆற்றங்கரையில் இருந்து  மீண்டும் ஆலயத்திற்கு சென்றார்.இந்த உற்சவத்ததில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *