ammanuku-ugandha-aadi-velli

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு, திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பின்னர் லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்து அம்மனை வணங்கனால் சகல ஐஸ்வரியங்கள் கிட்டும்.  மேலும் வயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சணையுடன் வைத்து கொடுத்து, அன்னதானம் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.. 

மேலும் ஒன்பது பொருட்கள் கொடுப்பதன் காரணம் அம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளையும் சொல்வார்.இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும். மேலும் ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்து வந்தால் குடும்பத்திலுள்ள தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும் என்பது நம்பிக்கை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *