kuzhandhai-varam-arulum-isakki-amman

சென்னை  அம்பத்தூர், கள்ளிக்குப்பத்திலுள்ள ஓம் சக்தி நகரில் அமைந்துள்ளது இசக்கி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் இடது கையில் குழந்தையுடனும், வலது கையில் சூலத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன் அன்பும், வீரமும் அனைவரிடமும் இருக்க வேண்டும் என்பதையும், விவேகத்துடன் கூடிய வீரம் இருக்க வேண்டுமென்பதையும், குழந்தையை இடுப்பில் வைத்து அரவணைத்துக் காப்பதுபோல மக்களாகிய நம்மையும் காப்பாள் என்பதை உணர்த்துகின்றது.

மேலும் குழந்தை வரமருளும் தெய்வமாகவும், குழந்தைகளை காக்கும் தெய்வமாகவும்  பெண்களால் பெரிதும் போற்றப்பட்டும் தெய்வமாகவும் இசக்கி அம்மன் வணங்கப்படுகின்றாள். இத்திருத்தலத்தில் வந்து அம்மனை வணங்கி பூஜிப்பவர்களுக்கு தொட்டது யாவும் துலங்கும், வெற்றிகள் கிட்டும் என்பது நம்பிக்கை 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *