கோவில் ஒன்று ராஜகோபுரம் இரண்டு” பார்வதி தேவி காட்சி தரும் அதிசய சிவலிங்கம் !

Written by

in

இங்கு ராமகோனார் என்ற விவசாயி கரவை மாடுகளை வளர்த்து, அவைகள் மூலம் கிடைக்கும் பாலைக்கரந்து ஊர் முழுவதும் வியாபாரம் செய்து வந்தார். ஒரு முறை வழக்கம் போல் அரண்மனைக்கு பால் கொண்டு போகும்போது. அரண்மனை வீதியில் இருந்த கல் ஒன்றில் அவரின் காலை தடுக்கி நிலைத்திரு மாறிய போது அவரது, கையில் இருந்த பால் குடம் கீழே நழுவி விழுந்து அதிலிருந்து பால் முழுவதும்  கொட்டி விட்டது. இதேபோன்று தொடர்ச்சியாக  4 தினங்கள்  நடைபெற்றது.

எதிர்பாராமல்  தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் பரவாயில்லை,  தினந்தோறும் நடந்தால்'; அச்சமடைந்த விவசாயி ராமகோனார் அரண்மனைக்குச் சென்று" மன்னரிடம் நடந்ததை எடுத்துரைத்தார். இதைக் கேட்டு உடனே  மன்னர் படைவீரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு  அந்த இடத்திற்கு சென்று, வீதியில் இருந்த கல்லை அகற்ற கோடரியால் வெட்டும்படி ஆணையிட்டார், அதன்படி கல்லை அகற்ற முற்பட்டபோது. கோடரி பட்டதால் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதனைக் கண்டு, மன்னன் உள்ளிட்ட அனைவரும் நிலை குலைந்து நின்றனர். அப்போது விண்ணிலிருந்து ஒரு அசரீரி குரல் ஒலித்தது.

அந்தக் கல்லின் அடியில் சுயம்பு சிவலிங்கம்  இருப்பதாகவும், அந்த லிங்கத்தை தோண்டி எடுத்து திருக்கோவில் எழுப்பி அதனை கருவறையில்  மூலவராக  பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தி வழிபட வேண்டும் என அந்த குரல் ஒலித்தது. சிவபெருமானே"விண்ணிலிருந்து தனக்கு கட்டளையிட்டதாக உணர்ந்த மன்னன். அந்த சிவலிங்கத்தை பக்தியுடன் அணுகி அங்கிருந்து தோண்டி எடுத்து அதே" இடத்தில் சிவபெருமானுக்கு  நெல்லையப்பர் என்ற திருப்பெயரில் இன்றளவும் அருள் பாவிக்கும் கோவிலை கட்டியதாக இதன் வரலாறு கூறுகிறது. சுயம்பு வடிவ அருள் பாவிக்கும் சிவலிங்கத்தினை.

அருள்மிகு ஸ்ரீ 'நெல்லையப்பர் சுவாமி என்ற திரு பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்றும் அழைக்கின்றனர். சிவலிங்கத்தின்  மத்திய பகுதியில் அன்னை பார்வதி தேவியின் திரு உருவம் தென்படுகிறது.  அபிஷேக சமயத்தின் போது அந்த அற்புத காட்சியினை தரிசனம் செய்யலாம். அம்மையும்" அப்பனும் ஒன்று தான் என்பது போன்று" அர்த்தநாரீஸ்வரராக ஈசன் இங்கு காட்சி தருகிறார். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக இறைவனுக்கு என தனி ராஜ கோபுரமும், இறைவிக்கு என மற்றொரு ராஜ கோபுரமும் தனித்தனியாக கம்பீரத்துடன் நிற்கும் இரண்டு சன்னதிகளை இணைக்கும் பாலமாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு வெவ்வேறு கோவிலாக தோற்றம் அளித்தாலும் சக்தியும் சிவனும் ஒன்றே என்பதை மானுடருக்கு உணர்த்தும் இரண்டும் ஒரே கோவில்தான். அருள்மிகுஸ்ரீ காந்திமதி அம்மை உடனுறை அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில், தென் வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவன் கோவிலாக காட்சியளிக்கிறது. இதன் தீா்த்தம்: பொன் தாமரை தீா்த்தம்(சுவா்ணபுஷ்கரணி) வெள்ளி திருக்குளம் (சந்திரபுஷ்கரணி) சிந்துபூந்துறை உட்பட 32 புனித தீா்த்தங்கள்

தல விருட்சம்:
முங்கில்
ஆகமம்
காமிக ஆகமம்,
இசைக்கருவி:
சாரங்கி" – இத்திருக்கோவிலுக்கு.  வேணுவனம், நெல்லூா். சாலிவேலி. சாலிவாடி. சாலிநகா், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுா்வேதி மங்கலம், ஆகும்.
புராணத்தின் படி, பார்வதி தேவி தான் படைத்த உலகை காக்கும் பொருட்டு  இறைவனை வேண்டி கடும் தவம் புரிந்து சிவன்  அருளை உலகம் பெறும்படிச் செய்தது. இறைவனிடம் இருநாழி நெல் பெற்று.வேணுவனம் அடைந்து. முப்பத்திரண்டு அறங்களையும் வளா்த்தது.

கம்பை நதியின் கரையில் ஈசனை வேண்டி தவமிருந்து.நெல்லை நாதனது திரு அருளை பெற்று  சிவனும் சக்தியுமாய் தோன்றி உயிர்களுக்கு இன்ப  வாழ்வினை அளித்து அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து தவத்தின் வலிமையை அறிவுறுத்த அருள்வது,உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் அன்னை ஸ்ரீ காந்திமதி' கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருப்பெயருடன்  தவக்கோலம் கொண்டது.

அகத்தியமா முனிவருக்கு  திருமணக்கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது இங்குதான். சிவபெருமானின் நித்திய நிவேதனத்திற்காக  வேதசா்மா என்ற அந்தண சான்றோர் யாசகம் எடுத்து  வந்து உலா்த்தியிருந்த நெல்லை. திடீரென பொய்த கனமழை  அடித்து சென்றுவிடுமோ"  என அஞ்சியபோது. ஈசனே" இறங்கி வந்து உலர்த்தி வைக்கப்பட்டு இருந்த நெல்லை. மழை நீா் அடித்துச் செல்லாமல்'தானே" வேலியாக நின்று காத்தமையால் நெல்வேலி நாதா் எனவும் எனப்பெயா் பெற்றார். இதன் காரணமாகவே'  திருநெல்வேலி என்றும் பெயா் வந்தது.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்