இரண்டாம் புலிகேசியை வென்ற பல்லவ சேனாதிபதி” தன் மகனை கொன்று மாமிசத்தை சிவ அடியார்க்கு கொடுத்தது எப்படி ? 

Written by

in

காவிரி வளநாட்டில் தற்போதைய தஞ்சை மாவட்டத்தில்'  திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிறந்தவர்  பரஞ்சோதி இவர். நரசிம்ம வர்ம  பல்லவனின்  சேனாதிபதியாய் இருந்து. போர்க்களத்தில் இரண்டாம் புலிகேசி வென்று பகைவர்களை புற முதுகு காட்டி ஓட செய்து. வாதாபி நகரை கைப்பற்றி  கொண்டு அங்கிருந்து விலை உயர்ந்த செல்வங்களையும், பகைவர்களின் யானை, குதிரை படை, போர்க்கருவிகள் ஆகியவற்றையும் பல்லவ நாட்டு உடமை ஆகியதால், மன்னன் இவரது வெற்றியை போற்றும் வகையில் அரண்மனையில் சான்றோர் முன்னிலையில் விழா எடுத்து சேனாதிபதி பரஞ் சோதியின் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டினார். 
அப்போது அமைச்சர்கள், ‘அரசே! சேனாதிபதியிடம்  சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரியும் பண்பு உள்ளது. இதன் காரணமாக போரில் இவர் வெற்றிவாகை சூடி வருகிறார்.  என்றனர். இதனைக் கேட்டு பூரிப்படைந்த பல்லவ மன்னன்  அவருக்கு வேண்டிய பொன் பொருள், விலை நிலம்,  கால்நடைகள் ஆகியவற்றை வேண்டிய அளவிற்கு அளித்து வணங்கி, 'நீர் உம்முடைய சிவ தொண்டின் பணியினை சிறப்புடன் செய்வீராக’ என வாழ்த்தி அரண்மனை வாசலுக்கு சென்று விடை கொடுத்தனுப்பினார். 

பின் பரஞ்சோதி வெண்காட்டு நங்கை எனும் தன் மனைவி, அழகிய மகன் ஒருவனுடன் வாழ்ந்து, திருத்தொண்டினை புரிந்து வந்தார். ஒரு நாள் இவரது இல்லத்திற்கு உடல் முழுவதும் திருநீர் பூசி காவி உடையுடன் வந்த சிவ அடியார் தன் பசிப்பிணி நீங்க உணவளிக்குமாறு வேண்டினார், அப்போது உணவு உண்ண வீட்டிற்குள் அவரை பரஞ்சோதி அழைத்துச் சென்றபோது. தம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உணவு அருந்துவது வழக்கம் என்றும்' அந்த உணவு.

நரமாமிசத்துடன்‌ கூடியது. அந்த மாமிசமானது,  ஒரே புத்திரனாய்‌, அங்கக்‌ குறைவு ஏதும் இல்லாதவனாய், ஐந்து வயது பாலகனாய்
 இருப்பவனை அறுத்து, ஒரு உறுப்பும்‌ குறையாது  சமைத்ததாய்‌ இருக்கவேண்டும்‌” என்றார்‌ வந்த சிவ அடியார்‌.

அதனை ஏற்று; பரஞ்சோதி அடியாரின் விருப்பத்தை மனைவியிடம்‌ தெரிவித்தார்‌; அதன்படி தன்‌ மகன்  சீராளதேவனை கொன்று அறுத்துச்‌ சமைத்து, சிவ அடியாருக்கு உணவாக தந்தார்‌. அப்போது" “என்னோடு உண்ண இன்னொரு சிவனடியாரும்‌ வேண்டும்‌” என – இச்‌ சிவனடியார்‌ கேட்டார்‌.
உடனே பரஞ்சோதி வீதியில் வந்து தேடிய போது மற்றொரு சிவ அடியார் யாரும் கண்ணுக்கு தென்படாததால்,  இறுதியில்‌, “நீரே அமரும்‌” என்றார்‌ சிவ அடியார் பரஞ்சோதியிடம். அதற்கு அவரும் உடன்பட்டு அமர்ந்து, மகனின் மாமிசத்தை கையில் எடுத்து புசிக்க முனைந்தார்‌. உடனே" தடுத்த  சிவவனடியார்‌, “உமக்குப்‌ புத்திரன்‌ இருந்தால்‌ அவனையும்‌" அழையுங்கள்‌, ஒன்றாக அமர்ந்து உண்ணலாம்" என்றார்‌.

அதற்கும்‌ உடன்பட்ட பரஞ்சோதி, துயரத்தை உள்ளடக்கி வீதிக்குச் சென்று, மகனே“ சீராள!”  என்று அழைத்தார். உடனே,  குருகுலத்தில் இருந்து திரும்பிக்‌கொண்டிருந்த  தன்‌ மகன்‌ சீராள தேவன் எதிரே ஓடி வந்தான்‌.  பரஞ்சோதி அவனை ஆரத் தழுவி கொண்டு வீட்டினுள்‌ நுழைய, அச்சிவனடியாரும்‌ சமைத்த மாமிச உணவுகளும்‌ மறைந்துவிட்டன. 

ஆங்கு சிவபெருமான் ரிஷப வாகனத்தில்  காட்சி தந்து , திருத்தொண்டு புரிவதில் நீர் சிறந்தவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிறு பாலகனான உமது பிள்ளையை உணவாக்கி சிவ அடியாரின் பசிப்பிணி போக்கை எண்ணிய நீர் இன்று முதல் சிறுத்தொண்டர் என அழைக்கப்படுவீராக'அருளிய சிவபெருமான் ஜோதி வடிவாக மறைந்தார் அன்று தொட்டு பரஞ்சோதியார்; சிறுத்தொண்டர்‌ நாயனார் என மக்களால் அழைக்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் இறைத் தொண்டில் ஈடுபட்டு ஈசன் திருவடியிற்‌ சேர்ந்தார்‌ என்பது சிவ புராண வரலாறு'. 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்