Aquarius: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

கும்பம்

 

கிரகநிலை:

 

ராசியில் புதன், சனி, ராஹூபஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு() – களத்திர ஸ்தானத்தில் கேதுவிரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்  என கிரக நிலைகள் உள்ளன.

 

கிரகமாற்றம்:

 

07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

 

13.02.2026 அன்று சூரியன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

 

21.02.2026 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

 

பலன்:

 

இந்த காலகட்டத்தில் ராசியில் குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரமாக இருக்கிறார்.

 

 குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும்.

அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை அகலும்.

மனதில் இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ராசிக்கு 6ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார்கள்.

உடல் ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காணப்படும்.

பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

 

கலைத்துறையினர் எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும்.

 

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்புதன்

 

சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 05, 06, 07

 

அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 13, 14

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *