Tag: #விருச்சிகம் #ராசிப்பலன்2026 #பிப்ரவரிமாதம் #அதிர்ஷ்டம் #ஆன்மீகம் #VrishchikRashi #FebruaryHoroscope #AstrologyTamil #MonthlyPrediction #SuccessTips

  • Pisces: February will be a lucky month for these zodiac signs! Everything will turn out well!

    மீனம்

     

    கிரகநிலை:

     

    சுக ஸ்தானத்தில் குரு() – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேதுலாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரிய வெற்றி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.

    நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம்.

    உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

    எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள்.

    மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

    உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

     பெண்களுக்கு முயற்சிகள் நல்ல பலன் தரும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.

     அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

    கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

     

    பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறுவியாழன்

     

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 08, 09

     

    அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 15, 16, 17

     

     

  • Aquarius: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    கும்பம்

     

    கிரகநிலை:

     

    ராசியில் புதன், சனி, ராஹூபஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு() – களத்திர ஸ்தானத்தில் கேதுவிரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்  என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசியில் குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரமாக இருக்கிறார்.

     

     குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும்.

    அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும்.

    தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை அகலும்.

    மனதில் இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ராசிக்கு 6ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    உடல் ஆரோக்கியம் சிறக்கும். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காணப்படும்.

    பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

     

    கலைத்துறையினர் எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

    அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும்.

     

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்புதன்

     

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 05, 06, 07

     

    அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 13, 14

     

     

  • Capricorn: February will be a lucky month for this zodiac sign! Everything will go well!

    மகரம்

     

    கிரகநிலை:

     

    ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூரண ருண ரோக ஸ்தானத்தில் குரு() – அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் வீண்செலவுகள் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும்.

    எனவே முன் திட்டமிடல் அவசியம். கொடுத்த வாக்கை காப்பாற்ற எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள்.

    மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.

     இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

     

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

     குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.

    பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

    பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு யோகம் ஏற்படும்.

    அரசியல்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

     

    பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்ய காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன்வெள்ளி

     

    சந்திராஷ்டம தினங்கள்:       பிப்ர 03, 04

     

    அதிர்ஷ்ட தினங்கள்:   பிப்ர 10, 11 ,12

  • Sagittarius: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    தனுசு

     

    கிரகநிலை:

     

    தனவாக்கு ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்  – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூசப்தம ஸ்தானத்தில் குரு() – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குரு ராசிக்கு ஏழில் வக்ரம் பெற்று சஞ்சாரம் செய்வதால் பணவரத்து திருப்தி தரும்.

     எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

    ராசிக்கு எட்டில் செவ்வாய் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

    வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

     குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

    பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

    கலைத்துறையினருக்கு பொருளாதாரம் மேன்மை காணப்படும். அரசியல்துறையினருக்கு காரியங்கள் வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

     

    பரிகாரம்: சிவபெருமானை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்செவ்வாய்வியாழன்

     

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 01, 02, 28

     

    அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 08, 09

  • Scorpio: February will be a lucky month for this zodiac sign! Everything will go well!

    விருச்சிகம்

     

    கிரகநிலை:

     

    தைரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – சுக ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூஅஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு() – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றம்:

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் ஏற்படும்.

    ராசிக்கு 4ல் சுக்கிரன் இருப்பதால் எண்ணியதை செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.

    புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

    குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது.

    பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம்.

    தெய்வ பக்தி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். அரசியல்துறையினருக்கு முன் திட்டமிடல் எதிலும் அவசியம்.

    மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

     

    பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய்வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 26, 27

    அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 05, 06, 07