சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை தலைநகராகக் கொண்டு, பாண்டிய மன்னர்கள் அரசாட்சி புரிந்து வந்தனர், முடி சார்ந்த மன்னரும்" முடிவில் பிடி சாம்பல் ஆவான்" என்ற பட்டினத்து அடிகளின் தத்துவத்தின் அடிப்படையில் அம்மண்ணை ஆண்ட மன்னர்கள் அனைவரையும் தன் ஆளுமையால் மண் ஆண்டு முடிவுரை எழுதிய மதுரை மாநகரில்' சக்தியின் வடிவமான மீனாட்சி இன்றும் அரசாட்சி புரிந்து வருகிறாள். முடிவில்லா" இவளது ஆட்சியிலும் ஒரு முறை மதுரை மாநகரில் பிரளயம் ஏற்பட்டபோது. சிவபெருமான் எப்படி நகரை காப்பாற்றினார் தெரியுமா ? வாருங்கள் அறிந்து கொள்ளலாம் அந்த சொக்கநாதனின் திருவிளையாடலை"
புராண களத்தில் ஒருமுறை மதுரை மாநகரில் பிரளயம் ஏற்பட்டு, பூமி இரண்டாக பிளந்தது.
இதனால் நகரின் நான்கு புறமும் பெரும் வெள்ளம் சூழ்ந்ததால், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி பூமிக்குள் புதைந்தது, அனைத்து கால்நடைகளும் உயிரினங்களும் ஏராளமான மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர். அப்போது மதுரையின் அரசியான மீனாட்சி மதுரை மாநகரை காக்க வேண்டி, சிவபெருமானை நோக்கி தவம் தவம் புரிந்தால்' அப்போது மீனாட்சியின் வேண்டுதலை ஏற்று"சிவபெருமான் பாம்பு உருவெடுத்து மதுரை மாநகரின் நான்கு புறத்தையும் தனது. உடலால் வளைத்து'. பாம்பாக இருந்தமையால்' அப்போது ஆக்ரோஷமாக படம் எடுத்து தன் வாளால் வெள்ளப்பெருக்கை தடுத்து. மதுரை மாநகரை காப்பாற்றி அருளினார். இதன் காரணமாகவே பாம்பின் படம் எடுத்த தலையும், அதன் வாலும் ஒன்றாக நின்ற இடமே" படப்புரம் என அழைக்கப்பட்டது. இது மருவி தற்போது மடப்புரமாக ஆனது.
இங்கு ஒருமுறை சிவபெருமான் உமையவளை அழைத்துக்கொண்டு வேட்டையாடுவதற்காக, வந்தபோது, அடர்ந்து விரிந்த வனப்பகுதியான. இந்த இடத்தில் உன்னால்' இதற்கு மேல் ஒரு அடி கூட நடந்து வரமுடியாது தேவி எனவே" நீ சற்று நேரம். இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாட சென்று வருகிறேன். என உமையவளிடம் கூறினார். அப்போது இந்த காட்டில், நான் மட்டும் எப்படி?" தனித்து இருப்பது சுவாமி" என உமையவள் கேட்டாள். உடனே" சிவபெருமான் காவல் தெய்வமான அய்யனாரை வரவழைத்து, உமையவளுக்கு தீங்கு ஏதும் நேராதவாறு" பாதுகாப்பாக இருக்குமாறு உத்தரவு இட்டு வேட்டைக்கு சிவபெருமான் புறப்பட்டார். அப்போது ஊமைவள், இந்த இடத்திற்கு நான் வந்ததால், இவ்விடம் சிறப்படையுமாறு அருள் புரிய வேண்டும் என கேட்டாள், அவ்வாறே" இறைவன் வைகையில் புனித நீராடி நம்மை" வணங்கி வழிபடும் அடியார்களுக்கு , காசிக்குச் சென்று கங்கை நதியில் புனித நீராடிய பலன் கிடைக்கும், என தேவிக்கு சிவபெருமான் வரம் கொடுத்தார்.
அதன்படி, மடப்புரத்தில் அன்னை பார்வதி, காளி தேவி வடிவில் தங்கினாள். அப்போது சக்திக்கு காவலாக நின்ற அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டாலும், சக்தியின் வடிவமாக இங்கு காட்சியளிக்கும்"அன்னை ஸ்ரீ பத்ரகாளி தான் வழிபாட்டிற்குரிய தெய்வமாக வணங்கப்படுகிறாள். ஈசன் அளித்த வரத்தின்படி மடப்புரத்தின் சற்று தொலைவில், வைகையில் புனித நீராடி அம்மை அப்பரை வணங்கும், பக்தர்களுக்கு இன்றளவும் காசி கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை, ஆலயத்தில் கூரையின்றி வெட்ட வெளியில் வானத்தை பந்தலாகவும்' மேகத்தை தோரணமாகவும்" கொண்டு, அதர்மத்தை அழிக்க புறப்படுவது போன்று" ஆக்ரோஷமாக நாக்கைத் துருத்தியபடி நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறாள் அன்னை ஸ்ரீ பத்ரகாளி. சக்தியின் இருபுறமும் இரண்டு பூதகணங்கள். 13 அடி உயரத்தில் அன்னையின் தலைக்கு மேல் குதிரை ஒன்று தாவி நிற்கிறது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் சென்றாள் அன்னை ஸ்ரீ பத்ரகாளியின் இந்த அருள் வடிவை கண்டு வணங்கலாம்.
பொன்.கோ.முத்து திருவள்ளூர்
Leave a Reply