Buddha said, “A good horse will run even if it sees the shadow of a whip.”

தனிமனித வாழ்விலும், அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது செயல்படுத்த வேண்டிய திட்டத்தை குறித்த நேரத்தில் நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவதும், சிந்தித்து செயல்பட வேண்டிய தருணத்தில் அவசரகதியில் முடிவுகள் எடுப்பதும் தீர்க்க முடியாத பிரச்சனையை உருவாக்கி விடும், இத்தகைய தருணத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து தான் அதற்கேற்ப தீர்வு கிடைக்கும் இத்தகைய தருணங்களில் புத்தர் வழியில் அமைதியாக இருப்பதே"சிறந்ததாகும்.

ஒரு தத்துவஞானி ஒருமுறை புத்தரிடம் கேட்டார்: "வார்த்தைகள் தவிர்த்தும், வார்த்தைகள் இன்றியும், எனக்கு உண்மையைச் விளக்குவீர்களா?"

புத்தர் அமைதியாக இருந்தார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு தலைவணங்கி அவர் புத்தருக்கு நன்றி கூறினார் " உங்கள் அன்பான தயவால், என் பிரமை அனைத்தும் களைந்து உண்மையான பாதையில் நுழைந்தேன்."

தத்துவஞானி வெளியேறியதும், புத்தரின் மூத்த சீடரான ஆனந்தர் கேட்டார் "ஆசீர்வதிக்கப்பட்டவரே, இந்த தத்துவஞானி எதை அடைந்தார்?"

புத்தர் பதிலளித்தார் " நல்ல குதிரை, சவுக்கின் நிழல் பார்த்தாலும் ஓடும்"

பொன்.கோ.முத்து

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *