Sree Angala Parameswari Koil Poojai

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.

அதன்படி இன்று பௌர்ணமியில் முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு  மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மஞ்சள் மற்றும் சிவப்பு கயிறுகளால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் பவனி ஊர்வலம் கோவிலை சுற்றி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *