Thanjai ashada navarathiri

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் மஹாகணபதி ஹோமத்துடன்  சிறப்பாக இன்று தொடங்கியது.

10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் இனிப்பு அலங்காரம்,குங்கும அலங்காரம், மஞ்சள் அலங்காரம்,சந்தன அலங்காரம்,மாதுளை அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்,மேலும் அதனைத்தொடர்ந்து மாலை கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு  பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து கொண்டனர், இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *