angalaparameswari amman koil kumbabishegam

உத்திரமேரூர் அருகே மாகறல் கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மாகறல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக, கணபதிஹோமம், நவகிரகவ ஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, சாந்தி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, இன்று காலை 6:00 மணி முதல் யாகசாலை பூஜை, ஹோமம், சங்கல்பம், மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைப்பெற்றதை தொடர்ந்து 10 மணியளவில் சிவாச்சாரியார்கள் தலைமையில் இசை வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புறப்பட்ட கலசம் கோவிலை சுற்றி வந்து விமான கோபுரத்தில் புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காட்டப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது.

இந்த கும்பாபிஷேக விழாவில் மாகறல் கிராமத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *