Viruchigam Shakthi Online – February – Monthly Prediction – 2024

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ –  ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு  – லாப ஸ்தானத்தில் கேது, சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

04-02-2024 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-02-2024 அன்று சூர்ய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-02-2024 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கடின உழைப்பை கண்டு அஞ்சாத விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

பெண்கள் மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்.

கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

விசாகம் 4ம் பாதம்:

இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.

அனுஷம்:

இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு ஏற்பட்டாலும் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.

கேட்டை:

இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.

பரிகாரம்:  சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்:  19, 20

அதிர்ஷ்ட தினங்கள்:  13, 14

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *