Nellaiappar national flag

குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டது கோவில் யானை காந்திமதி மற்றும் கோவில் ஊழியர்கள் வணக்கம் செலுத்தி தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர்.

 தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி அவர்களால் வழங்கப்பட்ட தூண் முன்பு தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவிலில் தேசியக்கொடி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் யானை காந்திமதி முன் செல்ல ஊர்வலமாக கோவில் ஊழியர்களால் தேசிய கொடி எடுத்து வரப்பட்டது.

 தொடர்ந்து கொடிகம்பம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேசிய கொடியை கோவில் செயல் அதிகாரி ஏற்றி மரியாதை செய்தார் அப்போது கோவில் யானை காந்திமதி மூன்று முறை பிளிறி தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்ததது.அதே வேளையில் கோவில் ஊழியர்களும் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர் தொடர்ந்து தேசியக்கொடிக்கு மகா தீபாராதனை நடைபெற்று குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *