Nagar chadurthi vinayakar vazhipadu

நாக சதுர்த்தி என்றால் ராகு கேதுவுக்கு உகந்த விஷயமாக சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். ராகு கேதுவுக்கு உரிய அற்புதமான நாள்தான் இது. என்றாலும் இந்த நாளில் விநாயகப் பெருமானை வணங்குவதே வளம் சேர்க்கும் என்கின்றன ஞானநூல்கள்!

ஆடி மாதத்தில் வருகிற நாக பஞ்சமியும் நாக சதுர்த்தியும் விசேஷமானவை. ஆனாலும் ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் வருகிற நாக சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவது இன்னும் இன்னுமான பலன்களைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இந்த நாளில் அருகம்புல் சார்த்தி, கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து வணங்கினால், ராகு கேது முதலான தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும். சங்கடங்கள் அனைத்தும் விலகும்! சந்தோஷங்கள் பெருகும்.

இந்த நாளில், லட்சுமி குபேர பூஜை செய்வதும் விசேஷம். அல்லது அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை வணங்கிப் பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்!

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபடுவதுடன், அருகில் உள்ள புற்றுக்கோயிலுக்குச் சென்று, நாகராஜரை முட்டை, பால் வைத்து வழிபட்டால், சர்ப்ப தோஷ நிவர்த்தி நிச்சயம்!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *