senkazhuneer amman koil thiruvizha

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தபெற்ற வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீரம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மீனவ கிராமமான வீராம்பட்டினத்தில் பழமை வாய்ந்த செங்கழுநீரம்மன் தேவஸ்தானம் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். இந்த ஆலயத்தில் உள்ள தேவதாருவின் முழு உருவம் மரத்தால் செய்யப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீரம்மன் தேரடி வீதியில் உலா வந்து தேர் முற்றத்தில் வந்து நிற்கும். இந்த தேர் திருவிழாவின் சிறப்பு, பிரஞ்சு ஆட்சிக்காலம் முதலே ஆளுநர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைப்பர்.

இதன்படி செங்கழுநீரம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா வெளளிக்கிழமையான இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள்  ஜெயக்குமார், சாய் சரவணன்  உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வீராம்பட்டினம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதி உலா நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *