amman thirukalyanam

சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி நாகாத்தம்மன் ஆலயத்தின் 25 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி திருவிழாவின் இறுதியாக அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஊர் பெண்கள் ஒன்றாக இணைந்து அம்மனுக்கு பெண் வீட்டு சீதனமாக  சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர் பின்னர் அம்மனின் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது பின்னர் ஸ்ரீ புவனேஸ்வரி நாகாத்தம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இதில்  பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேரை இழுத்துச் சென்றனர் பம்பை உடுக்கை, தாரை தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள் முழங்க மதுரவாயல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது இதனை ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ புவனேஸ்வரி நாகாத்தம்மனை  தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *