Kadagam Sakthi Online August Monthly Prediction – 2023

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:
ராசியில் சூர்யன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன்(வ), புதன் – சுக ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) – தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
16-08-2023 அன்று சூர்ய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-08-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
19-08-2023 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
24-08-2023 அன்று சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுக்கும் கடகராசியினரே இந்த மாதம்  எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சற்று கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமை யாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலை பளு குறையும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.

பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும்.

பரிகாரம்: மேல் மருவத்தூர் ஆதி பராசக்தியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *