Venugopala samy koil kumbabishegam

வாலாஜாபேட்டை பெருமாள் கோவில் தெருவில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவில் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற‌ நாமம் முழுங்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை பெருமாள் கோவில் தெருவில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட திருத்தலமான ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி  ஆலயத்தில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் திருக்குட நன்னீராட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக நான்காம் கால யாக சாலை பூஜையில் பல்வேறு நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கலசத்தில் வைத்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, திரவ்யாஹீதீ, நாடிசந்தனம், தத்வார்சனை, ஸ்பர்சாஹூதி, ஆகியவை தொடர்ந்து அதிகாலை கோ பூஜை, நாடி சந்தனம், மகாபூர்ணஹூதி உள்ளிட்டவை நடைபெற்றது அதைத்தொடர்ந்து வேத பட்டாச்சாரியார்கள் பெருமாள் நாமம் பதித்த கலசத்தை தலையில் சுமந்து ஆலயம் முழுவதும் கடம் புறப்பாடு நடைபெற்று ராஜ விமான கோபுரத்திற்கு சிறப்பு மங்கள சிறப்பு பூஜைகள் செய்து அஷ்டபந்தன ஸமஹா கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆலயத்தின் அடிவாரத்தை கீழே  இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனித நீரை கொண்டு  தெளிக்கப்பட்டது இந்த நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழாவில் வாலாஜாபேட்டை நகரம் உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..கோவிந்தா..  என நாமம் முழங்க சுவாமியை பக்தியுடன் வழிபட்டு சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *