chidamparam natarajar car festival

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றுது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆனி திருமஞ்சன தரிசனம் நாளை மதியம் நடைபெற உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனி திருமஞ்சன திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று நடைபெற்றது.

11 நாட்கள் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழா தினந்தோறும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வீதி உலா நடைபெற்று வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நடராஜர் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளை ஆயிரம் கால் மண்டபத்திற்க்கு கொண்டு வந்த தீட்சிதர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்து அருளினர்.

சரியாக காலை 8.00 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருகை புரிந்த திரளான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சிவசிவ என கோஷங்களோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *