Salagrama kal endral enna

சாளக்கிராமத்தில் மும்மூர்த்திகளும் தேவாதி தேவர்களும் நித்யவாஸம் செய்கின்றனர். நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகின்றது. மஹாவிஷ்ணுவின் அம்சம்தான் சாளக்கிராமம்.

சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். சாளக்கிராமம் மிகவும் புனிதமானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. நத்தைக் கூடு, சங்கு, நட்சத்திரம் என்று பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் இந்த சாளக்கிராம கல், புனிதமான கண்டகி நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது.

சாளக்கிராமம் என்பது ஒரு வகையான அழகிய தெய்வீக அம்சம் நிறைந்த கல் ஆகும். ஸ்ரீமஹா விஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியாக வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார்.

அங்கு ரீங்கார வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள் தான் வணங்கிட உகந்தவையாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *