koumariamman koil therottam

தேனி கௌமாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் தேனி நகரில் பழமை வாய்ந்த சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலய மூலவர் கௌமாரியம்மன் க்கு வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரித்து காட்சியளிக்கப்பட்டு தீபாராதனை காட்டினார்.

அதைத் தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டு உடுத்தி மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். பின்னர் வண்ண மலர்களால் அலங்கரித்து காட்சியளிக்கப்பட்டிருந்த தேரின் மீது கலசத்தை ஆலயத்திலிருந்து எடுத்து வந்து தேரின் உச்சியில் வைத்தனர். பின்னர் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டு சிவாச்சாரியார்கள் தோலில் சுமந்து கொண்டு திருத்தேரில் அமர்த்தினர்.

தேரில் அமர்ந்து காட்சியளித்த உற்சவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டிய பின்பு நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கூடி நின்று திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *