varadharaja perumal temple

வாலாஜாபேட்டை ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் உடையவர் உற்சவமாக சித்திரை திருவாதிரையில்  அவதாரமான ஸ்ரீ  ராமனுஜர் திருமஞ்சன ஜெயந்தி விழாவில் சகஸ்ரதார கலசாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜ பெருமாள் ஆலயத்தில் சித்திரை திருவாதிரை அவதரித்த வைஷ்ணவ ஆச்சாரியர்  ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சியளித்து வருகிறார்.

இந்த நிலையில் உடையவர் ஸ்ரீ  ராமானுஜர் ஜெயந்தியான இன்று மூலவர் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ ராமானுஜருக்கு பால், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், தயிர், கதம்பொடி, சீயக்காய், போன்ற எண்ணற்ற திருமஞ்சன அபிஷேகங்கள் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *