Anjaneyar lakcha deepam

களம்பூர் பேரூராட்சி ஆரணி திருவண்ணாமலை சாலையில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாகவும் 30 அடி உயர ஸ்ரீ வீர ஆஞ்சிநேயர் திருக்கோவில் 60 ம் ஆண்டு மஹா இலட்ச தீபம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாபட்டது.

மேலும் இன்று தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சிநேயருக்கு வடமாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது.  பின்னர் நேற்று இரவு மஹா இலட்ச தீபம் விழா தொடங்கியது.

இதில் பெண்கள் ஆண்கள் நீண்ட வரிசையில் நின்று 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்திக் கடன் நிறைவேற்றும் விதமாக சுமார் இலட்சம் தீபம் ஏற்றி  வழிபட்டனர். இதில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கபட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓரு இலட்சம் தீபங்கள் ஏற்றி ஸ்ரீ வீர ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *