Veetil selvam sezhikka

வீட்டின் பூஜை அறையில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது. வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்கவே  கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம் துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

பச்சைக் கற்பூரம், சோம்பு, ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காட்டி பூஜித்து வந்தால் வீட்டில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

மகாலட்சுமியின் வாசம் நிறைந்திருக்கும் லவங்கப்பட்டையின் குச்சியில் பத்து ரூபாய் தாளை சொருகி வைத்து, அதனை உங்கள் பணப் பெட்டியில் வைத்து விடுங்ககள். இவ்வாறு செய்வதால் பணத்தை உங்களிடம் ஈர்க்க முடியும்.

நீங்கள் பணம் வைக்கும் பர்ஸில் இரண்டு புதினா இலைகளை எப்பொழுதும் வைத்திருக்க, உங்கள் பர்ஸில் இருக்கும் பணம் குறையாமல் இருந்து கொண்டே இருக்கும். இதனை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *