Thirupathy vaibavam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும்   வருடாந்திர வசந்தோத்ஸவத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக  பெருமாள் உபய தேவியரோடு அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு பால் தயிர் தேன் மஞ்சள் சந்தனம் போன்ற பல வகையான வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து பெருமாள் தாயார்களுக்கு தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் சமர்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *