Kanchi ther thiruvizha

உலக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவின் ஏழாம் நாளான இன்று  64 அடி உயர மகா ரத திருத்தேரில் ஏகாம்பரநாதர் ஏழவார்குழலி அம்மனுடன் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் நான்கு ராஜ வீதிகளில்  திருவீதி உலா நடைபெற்றது.

பஞ்ச பூத ஸ்தலங்களில்   மண் ஸ்தலமாக விளங்குகின்றதும், உலக பிரசித்தி பெற்றதுமான கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொயேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழாவில் ஏழாம் நாளான இன்று  முக்கிய உற்சவமான மகாரத திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அதையொட்டி

ஏகாம்பரநாதர்  ஏலவார்குழலி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் இளநீர், லுங்கு உள்ளிட்ட பல வகையாக பழங்கள்,மலர்கள், தோரணைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த 64 அடி உயரமுள்ள மரத்தினால் ஆன மகா ரத திருத்தேரில்  எழுந்தருளி சிறப்பு  தீபாராதனைகள் கட்டப்பட்டு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

பின்னர் மேளத்தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க கோலாட்டம்,கும்மியாட்டம், ஒயிலாட்டங்களுடன்,  ஏராளமான பக்தர்கள் மகா ரத திருத்தேரை வடம் பிடித்து  இழுத்து செல்ல வழி நெடுங்கிலும்  பல்லாயிரக்கணக்கான  பக்தர்களின் வெள்ளத்தில் நீந்தியப்படி ஏகாம்பரநாதர் 4 ராஜவீதிகளில் திருவீதி உலா   திரண்டிருந்த   பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார்.

மகா ரத திருத்தேர்   உற்சவத்தைக்கான  காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் மற்றும்  திரளான பொதுமக்களும் என பல்லாயிரக்கணக்கானோர் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என பக்தி கர கோஷங்களுடன்   ஏகாம்பரநாதரை தரிசித்து சாமி தரிசனம் செய்தி வழிபட்டு சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *