Venkatachalapathy temple kumbabishegam

வேப்பத்தூர் ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய  மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் ஸ்ரீ சைலபதிபுரம் தெலுங்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோபாலகிருஷ்ண சுவாமி, ஸ்ரீ பூமி, நீளா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து   கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர்,  கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *