Ratnagiri koil thiruvizha

ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் 56-ஆம் ஆண்டு மெய்ஞானம் பெற்ற திருநாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் கூடிய மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவிலில் 1968-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று கோவிலின் 56- ஆம் ஆண்டு அடி வைத்ததை தொடர்பு மெய்ஞானம் பெற்ற தினமாக கருவறையில் இருக்கும் பாலமுருகன் சாமிக்கு அர்ச்சகர்கள் பூ மாலைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பாலமுருகனடிமை அடிகளார் சுவாமிகள் கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு பின்னர் கோவில் வளாகத்தில் வெளியே மிக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  அன்னதான கூடத்தில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வடை பாயாசத்துடன் கூடிய மாபெரும் அன்னதானத்தை பாலமுருகனடிமை அடிகளார் சுவாமிகள் தங்கள் கை கரங்களால் வழங்கினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *