kumbakkonam masi maga therottam

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமக விழாவின் முக்கிய நிகழ்சியாக சக்கரபாணி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மாசி மக திருவிழாவில் சிவ வைணவ ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வைணவ திருத்தலமான சக்கரபாணி கோயிலில் இன்று திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுதர்ஸன வல்லி விஜய வல்லி தாயார் சமேத சக்கரபாணி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து தேர் ஓடும் வீதிகள் வழியாக சக்கர ராஜா சக்கர ராஜா என பக்தி கோஷங்களை எழுப்பி இழுத்து சென்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *