arasu vembarasi thirukalyanam

புத்தூர் கல்யாணசுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பரசி திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை புத்தூர் கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பரசி திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது அது சமயம் முன்னதாக விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம் பார்வதி பரமேஸ்வர ஹோமம் உள்ளிட்ட ஹோமம் நடைபெற்றது.

மேலும் ஆலயத்திலிருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களுடன் ஏராளமான பெண்கள்  சீர் தட்டுகளை எடுத்து வந்து  அரசு வேம்பு திருமணம் ஆகம விதிப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தில் திருவடி குடில் சுவாமிகள் கலந்து கொண்டு அரசு வேம்பு திருமண சிறப்புரை நிகழ்த்தினார்.

திருக்கல்யாணத்தில் புத்தூர் கிராம தலைவர் நிர்வாகிகள் விழா குழுவினர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் பெண்கள் மற்றும் கிராம வாசிகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *