Asta Iswaryangal vasamaga

கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மஹா சங்கடஹர சதுர்த்தியில் அர்ச்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி தனலாபம் கிட்டும். அல்லது கணபதி ஹோமம் மற்றும் ஸ்ரீ ஸுதர்சன ஹோமம் மாதம் ஒருமுறை செய்தால் பணம் தடையின்றி கிடைக்கும். பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.

செல்வத்திற்கு உரியவள் மஹாலஷ்மி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும். தினமும் லஷ்மிகுபேரரை மனதார வழிபட பணம் தடையின்றி கிடைக்கும். இந்திராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும். வியாழன் அன்று குரு ஓரையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும். செந்தாமரையில் அமர்ந்துள்ள அஷ்ட லஷ்மியை வழிபட பணம் கிடைக்கும். கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் நாராயண சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் கண்டிப்பாக வரும். அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும். திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார் படம் வைத்து தினமும் வழிபட பணம் வரும். தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி பூஜை செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும். சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடி கணக்கில் பணம் கிடைக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *