Hayagreevar homam

பத்தாம் வகுப்பு பதினொரம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெற லட்சுமி ஹயக்ரீவர் தன்வந்திரி சரஸ்வதி ஹோமம் நடைபெற்றது 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டு ரங்கநாத சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இந்த தேவஸ்தானத்தில் மாதம் தோறும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு பதினொராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல முறையில் தேர்வு எழுத சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடக்க இருப்பதால் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வைபவ குழு மற்றும் ஸ்ரீ ருக்மணி  சமேத பாண்டுரங்கன் நாத சுவாமி தேவஸ்தான அறக்கட்டளையின் சார்பில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் தன்வந்திரி சரஸ்வதி ஹோமம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பாதத்தில் வைக்கப்பட்ட பேனா மற்றும் கங்கன கயிறு வழங்கப்பட்டது இந்த வைபவத்தில் அப்பகுதியில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *