narpalan tharum suba thitigal

குறிப்பிட்ட கிழமைகளில், குறிப்பிட்ட திதி வருவது சுப திதிகள்/ அசுப திதிகள் என்று ஜோதிட சாஸ்திரத்தில்  வரையறுக்கப்பட்டுள்ளது.
 
நற்பலன் தரும் சுபதிதிகள்:
          
ஞாயிற்றுக்கிழமை வரும் அஷ்டமி திதியும், திங்கட்கிழமை வரும் நவமி திதியும், செவ்வாய்க்கிழமை வரும் சஷ்டி திதியும், புதன்கிழமை வரும் திருதியை திதியும், வியாழக்கிழமை வரும் ஏகாதசி திதியும், வெள்ளிக்கிழமை வரும் திரயோதசி திதியும், சனிக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும் சுபகாரியங்களுக்கு ஏற்ற திதிகள் நண்பர்களே.
 
சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள்:
 
ஞாயிற்றுக்கிழமை வரும் சதுர்த்தசி திதியும், திங்கட்கிழமை வரும் சஷ்டி திதியும், செவ்வாய்க்கிழமை வரும் சப்தமி திதியும், புதன்கிழமை வரும் துதியை திதியும், வியாழக்கிழமை வரும் அஷ்டமி திதியும், வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியும், சனிக்கிழமை வரும் சப்தமி திதியும் சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள். இந்தக் காலங்களில் சுப காரியங்கள் தவிர்ப்பது நலம் நண்பர்களே. மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை மட்டும் வைத்தே சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்யக்கூடாது.நட்சத்திர தாராபலனோடு சேர்த்துப்பார்த்து சுப காரியங்களுக்கு நாட்களை தேர்வு செய்வது மிகச்சிறப்பு.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *