Shimmam February Monthly Prediction – 2023

சிம்மம்:

கிரகநிலை:

தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், சனி  – சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்:

04-02-2023அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

13-02-2023 அன்று சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

16-02-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

21-02-2023அன்று புதன் பகவான் ரண ருண ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:

ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில்  மிகவும் வேகம் காட்டுவீர்கள்.  தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.    

பெண்கள்  நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். எல்லா வித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும்.

மகம்:

இந்த மாதம் எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

பூரம்:

இந்த மாதம் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம்  எதிலும்  மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மியை தியானம் செய்து வணங்க குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *